வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 25.07.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 25.07.25


  கயப்பாக்கம் இரா.இராமேஷின் 'கேள்வித் தீ' என்ற சிறுகதை இன்றைய உலக நடப்பை உணர்த்தியது. இதையெல்லாம் எல்லா மட்டங்களிலும் ஆரோக்கியமான சிந்தனை பரவினால்தான் சரி செய்யமுடியும்!


  'தீராத விளையாட்டு' என்ற நல.ஞானபண்டிதனின் சிறுகதையை படித்தேன். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அங்கப்பன் போன்ற அப்பாவிகளும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


  கவிதா சரவணனின் 'நாக பஞ்சமி 2025' என்ற கட்டுரையை படித்தேன். ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. நாக பஞ்சமியை கருடபஞ்சமி என்றும் வைணவ தலங்களில் கொண்டாடப்படுகிறது. நாகங்களை வழிபட்டால் தெய்வங்களுடன் இருக்கும் நாகங்கள் நம்முடைய கோரிக்கைகளை தெய்வங்களிடம் சொல்லி, அவை விரைவில் நிறைவேற ஆசி வழங்கும் என்பது போன்ற ஆன்மிக தகவல்கள் இந்து மதத்தின் சிறப்பான நம்பிக்கையை உணர்த்தியது.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் 'கொகினேனி ரங்க நாயகுலு' என்ற சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி படித்தபோது, இவர் விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர் என்பதை அறிந்தபோது, மனதில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது. இவர் அறுபதாண்டுகளாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பணி ஆற்றிய காரணத்தால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் என்ற தகவல் இவரின் பெரும் செல்வாக்கை நன்கு உணர்த்தியது.


  முத்து ஆனந்த்தின் 'நான் ஆசையிட்டால்..' என்ற மூன்று காதல் கவிதைகளும் விதம் விதமாக தனி தனி சுவையுடன் மனதைக் கொள்ளைக்கொண்டது. முக்கனியின் ருசியை விட இந்த காதல் ருசி கவிதைகள் மனதைத் துள்ள வைத்தது!


  பல்சுவை களஞ்சியத்தில் வெளியான ஏ.எஸ். கோவிந்தராஜனின் 'பொறுமையால் வெல்லலாம்' என்ற கதை, சொல்பேச்சு கேட்காத குறும்பர்களுக்கு நல்ல பாடம் என்றுதான் சொல்லவேண்டும். அந்த குதிரைக்காரர் புத்திசாலித்தனமாக பேசாமலிருந்து, உண்மையை நீதிபதிக்கு புரிய வைத்தவிதம் அபாரம்!



  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%