
அன்புள்ள
வணக்கமுடன் ஹரணி. தமிழ்நாடு இபேப்பர் தொடங்கிய இரண்டாமாண்டில் இணைந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறேன். பலருக்கு அது வேடந்தாங்கலாக இருக்கிறது. கவிதை சிறுகதை, கட்டுரை புதிதாக எழுதுகிறவர்களுக்கு நல்ல பயிற்சிப் பட்டறையாக இபேப்பர் அமைந்து சிறப்பாகச் செயலாற்றுகிறது. நல்ல நூல்களின் விமர்சனங்கள் வெளியாகின்றன. ஒரு பேப்பரின் சிறப்பை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் துணை நிற்பவை வாசகர் கடிதங்கள் மட்டிலுமே. அந்த வகையில் வாசகர் கடிதங்களுக்காக இரண்டு முழுப்பக்கங்களை ஒதுக்கும் பேப்பர் நானறிந்தவரையில் தமிழ்நாடு இபேப்பர்தான். ஒவ்வொரு கடிதமும் இபேப்பரின் ஒவ்வொரு பொருண்மைகுறித்துப் பேசுகிறது. அந்தளவுக்குப் பேப்பரை வாசித்து எழுதுவதிலிருந்தே அவர்களின் ஈடுபாடும் இபேப்பரின் தனித்தன்மையும் புலப்படுகிறது. அரசியல் செய்திகள், திரைப்படம் குறித்த நிகழ்வுகள், இந்தப் பாரததேசம் காக்கத் தன்னுயிரை ஈந்து தொண்டாற்றிய தியாகச்செம்மல்களின் வரலாறுகள், பக்தி இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பக்திப் பாடல்களின் சிறப்பு, பலன்கள், கடவுளின் அருளைப் பெற்ற அருளாளர்கள், பல்சுவைப் பகுதிகளில் பல்வேறு பயன்தரும் செய்திகள், கவிதைகளுக்காக இரண்டு பக்கங்கள் கவிஞர்களின் புகைப்படங்கள் மற்றும் கவிதைகளுக்கானப் படங்கள், இரண்டு சிறுகதைகள், குழந்தைகளின் கைவண்ணம் எனும் பகுதியில் சிறார் இலக்கியம் குறித்த படைப்புகள் என முழுமையாக இதழியல் பணியாற்றுவதில் தமிழ்நாடு இபேப்பரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
வாசகர் கடிதங்கள் எழுதுவதில் என் படைப்புகள் குறித்துத் தொடர்ந்து ஊக்கக் கருத்துரைக்கும் திருமிகு சின்னஞ்சிறுகோபு, சிகாகோ அவர்களுக்குத் தனிப்பட்ட நன்றிகள். அதுதவிர திருமதி ஜெயந்தி சுந்தரம், உஷா முத்துராமன், சின்னஞ்சிறுகோபு, வளர்மதி ஆசைத்தம்பி,நாகை தேவிகா, தென்காசி,பி. வெங்கடாசலபதி, சென்னை, பி, சுரேகா மற்றும் கல்லிடைக்குறிச்சி நடேஷ்கன்னா போன்றோர் தொடர்ந்து கடிதங்கள் வழி பேப்பர் குறித்து எழுதுவது முதல்நாள் பேப்பரை வாசிக்காதவர்கூட அறிந்துகொள்ள ஏதுவாகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் தமிழ்நாடு இபேப்பர்தான்.
தொடரும் பயணத்தில தமிழ்நாடு இபேப்பருடன் பயணிக்கும் எல்லாருக்கும் அன்பும் நன்றியும். தமிழ்நாடு இபேப்பருக்குப் பேரன்பையும் நன்றிகளையும் புலப்படுத்திக்கொள்கிறேன்.
அன்புடன்
ஹரணி, தஞ்சாவூர்-2
16.8.25
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?