வாசகர் கடிதம் (உஷா முத்து ராமன்) 16.08.25

வாசகர் கடிதம் (உஷா முத்து ராமன்) 16.08.25


 அன்புடையீர் 


வணக்கம். 16 .8. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் டெல்லியில் கொடியேற்றிய செய்தியும் சென்னையில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியதும் மிகவும் அற்புதமான செய்தியாக ஆனந்தமுடன் படிக்க வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக எனக்கு தொடங்க உதவியது.


திருக்குறளை பொருளுடன் படித்து மன நிறைவு பெற்றேன் . தெய்வம் இதழ் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது மிகவும் அருமையான தகவல் பார்க்கும்போது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.


தூக்கம் தாக்கம் நோய்கள் தலைதூக்கும் என்ற அதிர்ச்சியான தகவல்களைப் படித்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவு வகைகளை மிக அழகாக சொன்னது நலம் தரும் மருத்துவ பகுதிக்கு ஒரு மகுடம் போல் இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


தமிழகத்தில் முக்கியமான 12 கோவில்களில் நெகிழி என்று சொல்லப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது மிகவும் அருமையானது. இதனால் நெகிழிகள் பயன்பாடு குறைவது உறுதி.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் தில்லையாடி வள்ளியம்மை வரலாறு மிகவும் அருமை படத்துடன் படிக்கும் போது பெண்ணாகப் பிறந்த பெருமையை உணர்ந்தேன்.


பல்சுவை களஞ்சியம் பகுதிமிகவும் அருமை. மீம்ஸ் சிரிக்க வைத்தது ஜோக்ஸ் என்னையே மறந்து பார்க்க வைத்தது .


வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதியில் வந்த தேனின் மருத்துவ குணங்கள் படித்தது பெருமையாக இருந்தது. தினமும் தேன் சாப்பிடும் எனக்கு அது நல்ல பயனுள்ள தகவலாக என்னைப் படித்தேன்.


நேற்று சுதந்திர தினம் எங்கே எப்படி கொண்டாடப்பட்டது என்று படங்களுடன் படித்த போது அங்கு சென்று விட்டது போல ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலில் தாயார் அலங்காரம் என்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கொரட்டூரில் நடந்த தாயார் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாக பார்க்க வைத்தது.


சுற்றுலா பக்கத்தில் வந்த பாண்டிச்சேரியில் உள்ள சிறந்த கடற்கரைகள் என்று ஒன்றாம் பகுதியாக வந்த தகவல் மிகவும் நல்ல தகவல். பாண்டிச்சேரி சென்ற போது இந்த இடத்தை பார்த்தேன் என்று என் மலரும் நினைவுகள் எனக்கு என் மனதுக்குள் சொன்னது .


ஆணாக மாறுவேடம் விட்டு சகோதரியின் மாமனார் வீட்டில் பல கோடிகள் திருடிய பெண் கைது செய்யப்பட்டது செய்தி அதிர்ச்சியாக இருந்தது.


ஜம்மு காஷ்மீரில் வேக வெடிப்பில் 60 பேர் பலியான செய்தி அதிர்ச்சியான தகவல்.


உக்ரைன் போரின் நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புத்தின் அவர்களுக்கு ட்ரம்ப் அவர்கள் எச்சரிக்கை விடுத்த செய்தி அயல்நாட்டு செய்தி மிக அழகாகவும் தெளிவாகவும் சொன்னது.


சனிக்கிழமை பிறக்க அது சந்தோஷமாக மலர நான் தமிழ்நாடு இ பேப்பரில் உள்ள அனைத்து செய்திகளையும் படித்து பரவசம் அடைந்தேன் இப்படி ஒரு பரவச நிலைக்கு என்னை உட்படுத்திய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்து ராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%