மோப்ப நாய்களைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் மோப்ப எலிகளை பயன்படுத்தி நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கிறார்கள்
கம்போடியாக்காரர்கள்.
இதுவரை 11 லட்சம் கண்ணி வெடிகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த நாட்டின் ராணுவத்தினரிடம் " மோப்ப நாய் " பிரிவு இருப்பது போல " மோப்ப எலி " பிரிவும் இருக்கும் போல.
தாய்லாந்து நாட்டில் புத்த துறவிகள் சிலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த ஒரு பெண் அவர்களை மிரட்டி நூறு கோடி ரூபாய் வரை பணம் பறித்து இருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஆசையை துறப்பது தான் புத்த மதத்தின் முக்கிய கோட்பாடாகும். ஆனால் புத்த பிட்சுகளாக இருந்து கொண்டு பெண் விஷயத்தில் சபல புத்தியுடன் விளங்கி இருக்கிறார்கள் இவர்கள்.
இலங்கை அரசியலை நிர்ணயிப்பதில் புத்த பிட்சுக்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். உலகப் பற்றையும் உலக ஆசைகளையும் துறந்தவர்களுக்கு அரசியல் எதற்கு ?
அமெரிக்காவில் 10 மாநிலங்களில் பணியாற்றி வந்த 17 நீதிபதிகளை டிரம்ப் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்.
இந்த நீதிபதிகளில் பலர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருப்போரை நாடு கடத்துவதற்கு தடையாணை பிறப்பித்தவர்கள்.
வீடுகளுக்கு 125 யூனிட் வரை மின் கட்டணம் கட்ட தேவை இல்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்திருக்கிறார்.
தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களை நோக்கி இலவச பிஸ்கட்டுகளை வீசும் செயல் ஆரம்பமாகிவிட்டது.
தமிழகத்தில் திருத்தங்கல்
என்ற ஊரில் உள்ள அரசு பள்ளியில் குடிபோதையில் வந்த இரண்டு மாணவர்களை கேள்வி கேட்ட ஆசிரியரை மதுபாட்டிலால் அந்த இரு மாணவர்களும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத முறையில் போதைப் பழக்கமும் போதைப் புழக்கமும் தலை விரித்து ஆடுகின்றன.
தமிழக அரசு அடிக்கடி " போதை ஒழிப்பு
மாதங்களை " அறிவித்து சட்டவிரோதமான போதைப்பொருள் விற்பவர்களை வேட்டையாட வேண்டியது அவசியம் ஆகும். போதைப் பொருட்கள் கல்வி நிறுவனங்கள் வரை
கடை விரிக்கப்பட்டு வருவது தடுக்கப்பட வேண்டும்.
பெங்களூருவில் இருந்து
சென்னைக்கு மெத்தம் பைட்டமின் என்ற போதைப் பொருளை கடத்தி வந்து விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்து இருக்கின்றனர், இதுபோன்று நவீன ரசாயன போதை பொருட்களை கடத்துபவர்களுக்கு அரபு நாடுகளில் கொடுக்கப்படுவது போல மரண தண்டனை விதித்தால்
புதிதாக போதைப்பொருள் விற்பனை தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பார்கள்.
பெருந்தலைவர்
காமராசரைப் பற்றி
திமுகவின்
திருச்சி சிவா பேசியது
தமிழக அரசியலில் விவாத பொருளாக இருக்கிறது.
எவ்வளவு அனுபவம் வாய்ந்த பேச்சாளராக இருந்தாலும் உணர்ச்சி வசப்பட்டு ஏடாகூடமாக எதையாவது பேசி விடுவது என்ற பழக்கம் இன்று பரவலாக காணப்படுகிறது.
பொது இடங்களில் பேசும் போது தங்களது நாக்கை சென்சார் போர்டாக கற்பனை செய்து கொண்டு ஜாக்கிரதையாக பேச வேண்டும்.
இரண்டாம் நிலை தலைவர்களின் பேச்சுக்கும் செயலுக்கும் செயலுக்கும் கட்சித் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கிறது.
**********
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்