
வணக்கம்,
தமிழ்நாடு இ-பேப்பர் வெற்றிப் பயணத்தை இன்னும் அதிக வாசக உறவுகளுடன் இனிதே தொடர வாழ்த்துகள்.
உங்களது மூன்றாம் ஆண்டு பயணத்தில் நானும் பங்கு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சிக்கு உறுதுணையாக எங்களோடு பயணித்தவர்கள் என புகைப்படத்தை பிரசுரித்து நெகிழச் செய்த இ-குழுமத்திற்கு எனது நன்றியும் பாராட்டுகளும்.
அனைத்து செய்திகள் மட்டுமின்றி பஞ்சாங்கம், திருக்குறள், சிரிக்க, சிந்திக்க, சிறுகதைகள், ஆன்மீக தகவல்கள், தலைவர்கள் வரலாறு, புதுக்கவிதை, பலசுவை களஞ்சியம், வேலை வாய்ப்பு இன்னும் பல தகவல்களை சிறப்பாகவும், உள்ளது உள்ளபடியும் உள்ளது.
காலையில் அனைத்து பக்கங்களிலும் உண்மையான செய்திகளோடு நம் கைபேசியைத் தேடி வரும் பலவண்ணப் பட்டாம்பூச்சியாக புத்துணர்வை பரப்பும் தமிழ்நாடு இ- பேப்பர் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றி! நன்றி!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?