
" பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது " என்று ராகுல் காந்தி கூறுகிறார்.
அவரது பேச்சுக்கு வலு சேர்ப்பது போலத்தான் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே வாக்காளர் பட்டியலை எங்களுக்கு கொடுங்கள் என்று காங்கிரஸ் சார்பில் கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் தரப்படவில்லை.
தேர்தல் ஆணையம் யாருக்கும் சட்டவிரோதமாக சலுகை காட்டாத தன்னிச்சையாக சட்டப்படி நடக்கும் ஒரு அமைப்பு என்ற புகழுக்கு இப்போது களங்கம் ஏற்பட்டிருக்கிறது.
பிரேசில் நாட்டு முன்னாள் அதிபர் மீது அந்த நாட்டில்
வடக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதை ட்ரம்ப் விரும்பவில்லை. எனவே அந்த வழக்கை காரணம் காட்டி பிரேசில் நாட்டு பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து இருக்கிறார்.
அமெரிக்க நாடு இப்போது குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையைப் போன்று இருக்கிறது,
பிரேசில் நாடும் ட்ரம்புக்கு அதிரடியாக அமெரிக்க பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து இருக்கிறது.
" 75 வயது ஆனவர்கள்
அரசியலில் இருந்து ஓய்வு பெற்று மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் " ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். இது இந்திய நாடு எங்கும் முக்கிய பேசுபொருள் ஆகியிருக்கிறது.
செப்டம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு 75 வயது ஆகப்போவதால் மோகன் பகவத் அவர்கள் கூறியது பிரதமர் மோடியை மனதில் வைத்துத்தான் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆனால் உண்மையான நிலை வேறு விதமாக இருக்கிறது. ஆர் எஸ் எஸ்சின் யோசனைகளை பாஜக ஏற்காது என்றே தோன்றுகிறது. அரசியல் வட்டாரத்தில் பிரதமர் மோடி இந்திய அளவில் முன்னிறுத்தப்படுகிறார். பாஜக ஆட்சியின் அடையாளமாகவே அவர் சித்தரிக்கப்படுகிறார்.
விளம்பரங்களில் " பாஜக அரசு " என்பதற்கு பதில் " மோடி அரசு " என்றே விளம்பரப்படுத்தப்படுகிறது.
மோடி திட்டமிட்டு தன்னை கட்சியின் தவிர்க்க முடியாத நபராக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
தான் பிரதமராக இன்னும் பல ஆண்டுகள் பதவி வகிப்பதற்காக மோடி எதையும் செய்வார் என்பது அவரது அணுகுமுறைகளில் இருந்து தெரிகிறது.
*******
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?