அதிமுக, பாஜக பொருந்தாத கூட்டணி

அதிமுக, பாஜக பொருந்தாத கூட்டணி


ராணிப்பேட்டை, ஜூலை 13-

அதிமுக-பாஜக கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி. என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

ராணிப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி- 

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி கடந்த கால ஆட்சியின் போது, 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை தருவதற்கு தயாரா?. கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் கூறப்படாத பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை போல அதிமுக - பாஜக கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. தமிழகத்தின் நலனுக்கு எதிராக, கல்விக்கு தேவையான நிதியை கூட வழங்காமல் மத்திய அரசு அலைக்கழிக்கிறது. இதற்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%