
அரூர் மதிவாணன் எழுதிய " நல்ல மனம் வாழ்க" - பூஜா, ராம்பிரகாஷிடம் தன் அக்காவைப் பெண் பார்க்க வந்து போன செலவின் கடனை அடைக்கத்தான் பணம் கேட்கப் போனாள், அவனோ, "இவள் அக்கா பரிமளாவைக் கட்டிக் கொள்ள " தன் அம்மாவிடம் சம்மதம் கேட்டது காதில் விழுந்தால், நமக்கும் " நல்ல மனம் வாழ்க" என்றுதானே சொல்லத் தோன்றும்.
பிரபாவதி எழுதிய " அடிப்படை நட்பு" அடுக்கு மாடி குடியிருப்புகளில் குடியிருப்போர் அருகிலுள்ளோரை அறியாமல் இருப்பதை உணர்த்தியதுடன், குறைப் பிரசவ சிக்கல்களையும் படம் பிடித்துக் காட்டியது. அந்த கால "நான்" படத்தில் தாய் நாகேஷ் , " ஏழரை மாசம் சுமந்து பெத்த எனக்குத் தெரியாதா, கொமட்ல குத்துவேன்" எனக் கூறும் வசனம் நினைவிற்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?