"ஏம்மா..அந்த சிலிண்டர் வண்டி வந்துச்சாம்மா...."
எனக் கேட்டபடி தெருவோரமா குழாயடியில் நின்றிருந்த பெண்ணிடம் கேட்டாள்மங்கம்மா
"இன்னும் வரல பாட்டி"என தெரு முனை வரைப் பார்த்தவாறு சொல்ல
சிலிண்டர் வண்டிக் காரன் எப்போ வரவானோ...
அவ பாட்டுக்கு சொல்லிட்டு வேலைக்கு போயிட்டா , வெயில் வேற நிக்க முடியல என முணு முணுத்தவாறு மரத்தின் நிழலைத் தேடினாள் மங்கம்மா பாட்டி,
தூரத்தில் ஏதோ வண்டி டொட டொட ன்னு சத்தம் போட்டபடி வந்தது
எங்கே யாரையும் காணலையே கண்ணுவேற தெரிய மாட்டிங்குது
பக்கத்தில் வந்ததும் கையை நீட்டினாள் பாட்டி வண்டி அருகில் வந்ததும்
"தம்பி,அய்யா,நான் பெத்த மகராசா சிலிண்டர் வண்டியாப்பா"
வண்டியில் இரண்டு பேரில் ஒருவன்
"ஆமா பாட்டி யாரு பேருக்கு சிலிண்டர் வேணும்"
"வசந்தா ஏ மக பேருக்குப்பா.."
"எங்கே கொண்டு வரனும்"
"அதோ அந்த தனியா இருக்குல்ல ஓட்டு வீடு "
"சரி பாட்டி போங்க கொண்டு வர்றே "
"சரிப்பா சரிப்பா வா ராசா வா "ன்னு சொல்லிக்கொண்டே
பாட்டி முன்னே செல்ல வாகனத்திலிருந்து ஒரு சிலிண்டரை தோளில் தூக்கிக் கொண்டு பாட்டி பின்னாடியே சென்று வீட்டின் முன் சிலிண்டரை வைத்தான்
"யேப்பே அப்பிடி உள்ளே வச்சுருப்பே என்னாலே தூக்க முடியாது"
உள்ளே தூக்கி வைத்தவன் வெளியே வந்து பணமும் ,புக்கும்,
கேட்க
"இந்த எடுத்துட்டு வர்றே "
சின்ன பிரோவில் இருந்து மஞ்சப்பையை எடுத்து அதிலிருந்து
பணமும்,புக்கும்,எடுத்துக் கொடுத்தாள்
பணத்தை வாங்கி எண்ணியவன்
"பாட்டி அம்பது ரூபா குறையுதே"
"அய்யோ மக கொடுத்துட்டு போனதுதாயா, சிலிண்டருக்கும், அம்பது உங்களுக்கு ம் தான்னு, சொன்னாப்பா"
"பாட்டி சிலிண்டருக்கு அம்பது ரூபா கூட்டிட்டாங்க அதனாலே, தூக்கு கூலி அம்பது ரூபா கொடுங்க"
"இருப்பா ராசா பக்கத்து வீட்டுல யாரும் இருந்த கேட்டு வாங்கிட்டு வாறேன்"
ன்னு பாட்டி போனாள்
"நீங்க ஏத்திக் கேட்டா உடனே பணத்துக்கு நா எங்கே போவேன்
மரத்துலய காய்க்குது
நாளைக்கு வருவிங்கள்ல அப்போ வந்து வாங்கிக்கங்க "
மக குரல் கேட்டு வந்த பாட்டி
"என்னடி ஏன்டி கத்துறே"
"மாசமாச இவங்களோடு பெருந் தொல்லையா இருக்கு"
உங்க ரசீதுல்ல என்ன போட்டிருக்கு சிலிண்டருக்கு என்ன விலையோ அத மட்டும் கொடுத்தா போதும்னு போட்டு இருக்கு கேஸ் கசிஞ்சா வேலை பாத்து கொடுக்கணும்னு போட்டிருக்கு அதெல்லாம் பார்த்தா கொடுக்குறிங்க எதுவுமே இல்லே மாசமாசம் விலையை மட்டும் ஏறிருச்சுன்னு கேளுங்க "
"இதெல்லாம் பேசாதே இப்போ இதுக்கு என்ன சொல்றே"
"சிலிண்டரே வேணா பணத்தக்குடு கம்பெனியில் வந்து பேசிக்கிறே"விறகு வச்சு எரிச்சா சோறு வேகாதோ "ன்னு
சொல்ல
பணத்தையும் புக்கையும் கொடுத்து விட்டு சிலிண்டரை தூக்கிச் சென்றான்
நல.ஞானபண்டிதன்
திருப்புவனம் புதூர்