
தினசரி எல்லாம் செய்திகளையும்
முந்திக்கொண்டு தருவதில்
தமிழ்நாடு இ பேப்பர் சிறந்த
முறையில் பணியாற்றி வருகிறது.
அதிகாலை 3 மணிக்கு
நாங்கள் படிக்கும் அளவுக்கு
ஆர்வத்தை தூண்டுகிறது.
குஜராத் வதேரா ஆற்று பாலம்
இடிந்து விழுந்து 11 பேர் பலி
விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை
தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில்
மீண்டும் விபா வைரஸ்
தாக்குதல். குரு பூர்ணிமா
கட்டுரை விளக்கமாக இருந்தது.
முத்து ஆனந்த் அவர்களின்
காதல் கவிதை அபாரம்.
சின்னஞ்சிறு கோபுவின் குருவி
கவிதை சிறப்பாக இருந்தது.
புண்ணிய பலன்கள் எத்தனை
தலைமுறையை காக்கும் என்ற
கட்டுரை வியக்க வைத்தது.
அதில் 27 தலைமுறையையும்
குறிப்பிட்டது பயனுள்ளதாக
அமைந்தது. திரிபுராவில்
கனமழையால் 118 குடும்பங்கள்
பாதிப்பு. பாரத் பந்த் மூலம்
மேற்குவங்கம் ஒடிசாவில்
பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது.
வாசகர்கள் கருத்து என்ற பகுதியில்
நான் ஒன்றைக் குறிப்பிட
விரும்புகிறேன். வாரத்திற்கு ஒரு நாள்
கேள்வி பதில் பகுதியை
வெளியிட்டு சிறந்த கேள்விக்கு
பரிசு வழங்கலாம்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?