வாசகர் கடிதம்(வெ.ஆசைத்தம்பி ),11.07.25

வாசகர் கடிதம்(வெ.ஆசைத்தம்பி ),11.07.25


நேற்று நடந்த பாரத் பந்தில் பல தொழிற்சங்கங்களும் அரசு ஊழியர் சங்கங்களும் கலந்து கொண்டு வேலை நிறுத்தம் வெற்றி பெற  உதவின. சில மாநிலங்களில் வேலை நிறுத்தத்தில் தாக்கம் கொஞ்சம் கூட இல்லை, ஆனால் சில மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் இப்படி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அகில இந்திய வேலை நிறுத்தம் செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.


 இப்பொழுதெல்லாம் தொழிலாளிகளுக்கு தொழிற்சங்க உணர்வு மிகவும் குறைவாக உள்ளது.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு

தொழிற்சங்க தலைமை ஆணையிட்டால் அதை அப்படியே நிறைவேற்றும் தொழிலாளர் பட்டாளம் இருந்தது. அதனால் அரசாங்கங்கள் தொழிற்சங்கங்களுக்கு பயந்து அவர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தனர். ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் நடந்தால் கூட நாடே ஸ்தம்பித்துப் போகும். நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை இழக்கும்.


ஆனால் இப்போது எல்லாம் புதிய தலைமுறை தொழிலாளர்கள் தொழிற்சங்க உணர்வுகள் இன்றி பணி செய்கின்றனர்.


அதனால் தொழிலாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தினசரி 8 மணி நேர வேலை என்பது

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. 


அநீதியை கண்டு வெகுண்டெழுந்து போராடாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதை இவர்கள் உணர்வதில்லை. 

அதன் பலனை அவர்கள் பணிக்காலத்திலேயே அனுபவிக்கின்றனர்.


புதுக்கவிதை பகுதிகளில் இடம் பெறும் நமது வாசகர்களின் கவிதைகள் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன. அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு இ பேப்பர் வாய்ப்பு கொடுப்பதால் அவர்கள் சிறந்த கவிஞர்களாக உருவாகி வருகின்றனர், 

" எல்லா புகழும் தமிழ்நாடு இ பேப்பருக்கே ! "


                     

வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%