_*உன்னால்*_
_*பயன் கிடைக்கும் வரை நீ நல்லவன்*_
_உன்னால்_ _எந்தவிதப்_ _பயனும்_
_இல்லை என்றால் நீ கெட்டவன், இது தான் இங்கு ஒருசிலரின் குணம்._
_*முள்ளைத் தாண்டித் தான் ரோஜா...*_
_*பலருடைய இழிச் சொல்லைத்*_
_*தாண்டினால் தான் நீ ராஜா.*_
_அழகானது எல்லாம் போலியாக இருக்காது......_
_ஆனால்........_
_போலியான எல்லாம் அழகாகத்தான் இருக்கும்._
*_மனம் தான் வாழ்வின்_*
*_விளைநிலம்._*
*_அதன் தன்மையைப்_*
*_பொறுத்தே நம் வாழ்வு_*
_*அமைகிறது.*_
_பொய்க்கு_
_ஊரே சாட்சி_
_சொன்னாலும்,_
_உண்மைக்கு_
_ஒரே ஒரு சாட்சிதான்,_
_அது அவரவரின்_
_மனசாட்சி...._
_*தன்னை மட்டுமல்ல*_
_*அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது*_ _*தருமம்.*_
_ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்._
_*தினமும் யாராவது*_ _*ஒருவருக்கு*_
_*ஏதாவது*_ _*கொடுக்கவில்லை என்றால்*_ _*அவருக்கு தூக்கம் வராது.*_
_*அப்படி ஒரு பழக்கம்.*_
_அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு ரகசியமாகக் கொடுப்பார்._
_*ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பணம் முடிப்பை கையில் எடுத்துக்கொண்டார். வீட்டை விட்டு வெளியில் வந்தார்.*_
_தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார்._
_*அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் . தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டுத் திரும்பி வந்துவிட்டார்.*_
_அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி! மனநிறைவு அவர் முகத்தில்! நிம்மதியாகத் தூங்கி எழும்பினார்._
_*மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு . நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.*_
_இதைக்_ _கேள்விப்பட்டதும்_
_பெரியவருக்கு_ _வருத்தமாகிவிட்டது._
_*போயும் போயும்*_ _*ஒரு திருடனுக்கு*_
_*உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.*_
_சரி இன்றைக்கு_ _யாருக்காவது_
_உதவி செய்வோம் என்று முடிவு_ _பண்ணினார்._
_*எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்.*_
_மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின்_ _கையில் யாரோ பணத்தைக்_
_கொடுத்து விட்டுப் போய் இருக்கிறார்கள் என்று பேச்சு._
_*அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார்.*_
_இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்._
_*மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தைக் கொடுத்தார்.*_
_மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்._
_*தினம் தினம் இப்படி*_ _*ஆகிவிட்டதே*_
_*என்று நினைத்துக் கொண்டு*_ _*படுத்துத் தூங்கினார்.*_
_அன்று இரவு ஒரு கனவு._
_அந்தக் கனவில் இறைவன் வந்தார்._
_*நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை. உன்னிடம் பணம் வாங்கிய அந்தத் திருடன் திருந்தி விட்டான். அந்தப் பெண்ணும் திருந்தி விட்டாள். அந்தச் செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார்.*_
_அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது._
_*அது*_ _*மட்டுமல்லாமல் தருமம்*_
_*தன்னை*_ _*மட்டுமல்ல*_
_*அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது.*_