வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்),12.07.25

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்),12.07.25


    வெற்றி . மற்றுமோர் வெற்றி.ஆம் விண்வெளிப் பயணம் சென்ற இந்திய வீரர் அங்கே பயறு வகைகளை முளைக்க வைக்க முயன்ற சோதனையிலும் 

வெற்றி கிட்டியிருக்கிறது.

      தேங்காய், தேங்காய் எண்ணையின் சிறப்பு அறியாதவர்களே இருக்க முடியாது. இருப்பினும் அறிவியல் பூர்வமான கட்டுரை மேலும் வலுவூட்டி யிருக்கிறது. 

     டென்மார்க் சைப்ரஸ் நாட்டு கப்பல் கம்பெனிகள் இந்தியாவில் ரூ 10000/-

கோடி முதலீடு செய்ய விருப்பதான செய்தி நம் நாட்டில் வேலை வாய்ப்பு பெருக வாய்ப்பினை உருவாக்கும் என்பதால் மகிழ்ச்சி.

      கரிகாலன் கட்டிய கல்லணையைப் பார்க்கும்போது வியப்பு மேலிடும். இன்றைய தொழில் நுட்பத்தை வட அன்றைய தொழில் நுட்பம் சிறப்பாகவே இருந்திருப்பதை நிரூபிக்கிறது.இல்லையென்றால் கட்டப்பட்டு2000 ஆண்டுகளுக்கு மேலாகியும் நிலைத்து நிற்குமா? உலகிலேயே முதல் அணை என்பது

அறியாத தகவல்.

      விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதோடு அல்லாமல் பொது சேவைகளிலும் அளப்பரிய சேவை செய்த 

குட்டிமாலு போற்றப்பட வேண்டியவர் தான்.

    பலம் பலவீனம் பற்றிய

கட்டுரை அருமை. அடக்கம் உள்ளவர் எப்போதும் தன் பலவீனம் பற்றியும் அறிந்தே இருப்பார்கள்.உண்மை.

   சீனாவுக்குள் போய்வர 74 நாட்டினர்களுக்கு விசா தேவையில்லை என சீனா விதிகளைத் தளர்த்தியுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்க. யாதும் ஊரே யாவரும் கேளிர் .

    3ம் ஆண்டு தொடக்க விழா வாழ்த்துரைகள் வந்த வண்ணமாய் இருக் கிறது.

     பிரேக்கிங் தொடர் பார்த்து எதைத் தான் செய்வது என்று இல்லையா? ஆசிரியர்களே போதை மருந்தைத் தயாரித்த செய்தி . என்ன கொடுமை

     நகைச்சுவை பல்சுவை கவிதைகள் அருமை.



சிவ. சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%