சென்னை: ரேஷன் கார்​டை திருத்த​ 19 இடங்​களில் நாளை குறைதீர் முகாம்

சென்னை: ரேஷன் கார்​டை திருத்த​ 19 இடங்​களில் நாளை குறைதீர் முகாம்

சென்னை:

தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஜூலை மாதத்​துக்​கான மாதாந்​திர பொது​விநி​யோகத் திட்ட மக்​கள் குறைதீர் முகாம், சென்​னை​யில் உள்ள உணவுப் பொருள் வழங்​கல் மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​புத் துறை​யின் 19 மண்டல உதவி ஆணை​யாளர் அலு​வல​கங்​களில் நாளை (ஜூலை 12) காலை 10 முதல் பிற்​பகல் 1 மணி வரை நடை​பெறவுள்​ளது.


குடும்ப அட்​டைகளில் பெயர் சேர்த்​தல், பெயர் நீக்​கல், முகவரி மாற்​றம், கைப்​பேசி எண் பதிவு அல்​லது மாற்​றம் செய்​தல் மற்​றும் அங்​கீ​காரச் சான்று உள்​ளிட்ட பொது​விநி​யோகத் திட்​டம் தொடர்​பான சேவை​கள் மேற்​கொள்​ளப்​படும். மேலும், பொது​விநி​யோகக் கடைகளின் செயல்​பாடு​கள், குறை​பாடு​கள் குறித்த புகார்​களை தெரிவித்து தீர்வு பெறலாம் என்று​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%