
'அந்த வேலைக்காரி புனிதம் செய்கிற வேலையில் சுத்தம்தான். தன்மானத்தை சீண்டும்போது வெகுண்டெழுவாள்தான். வீட்டிலே இரண்டாவது தடவையாக கிடந்த ரூபாய் நோட்டு தன்னுடைய நாணயத்தையும் நேர்மையையும் சோதனை பண்ணிப் பார்க்கதான் இந்த ஏற்பாடு என்று நினைத்ததும் சரிதான். ஆனாலும் இந்த இரண்டு தடவையும் இது தற்செயலாக கூட நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அந்த புனிதம் ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? இன்னும் ஒரு தடவை பார்த்துவிட்டு , திரும்பவும் இப்படி நடந்தால் கோபித்துக்கொண்டு போயிருக்கலாம்' என்ற ஒரு எண்ணம் வளர்மதி ஆசைத்தம்பியின் 'வேலைக்காரி' என்ற சிறுகதையை படித்தபோது என் மனதில் ஓடியது!
நல. ஞானபண்டிதனின் 'மன்னரும் மந்திரியும்' படித்து நான் சிரித்த சிரிப்பில் சிகாகோ நகரமே அதிர்ந்துப்போனது! இப்படி ஒரு அட்டகாசமான நகைச்சுவை கதையை படித்து வெகு காலமாயிற்று! இந்த கதையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பாக வருகிறது!
'தரணியாளும் தனிச் சக்கரவர்த்தி' என்கிற சாக்லேட்டை பற்றிய நெல்லை குரலோனின் கவிதையும் இனிப்பாகதான் இருந்தது. சாக்லேட்டின் முழு வரலாற்றேயே சொன்ன இந்த கவிதை என் மனதில் மலரும் நினைவுகளாக ஓடியது!
'அடுத்தவன் என்ன பன்றான்னு... அவன் வேலையிலே தலையிடக்கூடாது' வேடிக்கை கதையை படித்து, "அடக் கடவுளே!" என்று விக்கித்துப்போனேன்! இதையே ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நான் இனி ஒருத்தர் வேலையிலும் தலையிடமாட்டேன்!
'ஓடுவது தேர்தான் உருளுவது சக்கரம்தான்! ஓங்கித் தெரிவது ஒற்றுமையின் முகம்!' என்று ஆரம்பமான 'தேரோட்டம்' என்ற முகில் தினகரனின் கவிதை, தேரோட்டத்தினால் ஏற்படும் சமுதாய மாற்றங்களை, மகிழ்ச்சியை அழகாக உணர்த்தியது.
'ஆனி விசாகம்-சிறப்பு' என்ற அரவிந்தனின் கட்டுரை மூலம் ஆனி விசாகம் என்றால் என்ன, அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை பற்றியெல்லாம் அறிய முடிந்தது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?