
விலை: ₹110
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
தொடர்புக்கு: 044 - 2433 2682
பாக்யா இதழில் வெளி வந்த கேள்வி- பதில்களின் தொகுப்பு இது. அவருடைய பதில்களில் பிடித்தவை இங்கே உங்கள் பார்வைக்கு:
ஏ.வி.தாமஸ், அயனாவரம்
அதென்ன? போதி மரத்தடியில் மட்டும்தான் ஞானம் கிடைக்குமா?
யாரு சொன்னது? ராமர் காட்டுக்குப் போனதுக்கு காரணம் கைகேயின்னு எல்லாரும் திட்டுவாங்க. ஆனா அந்த ராமர் 14 வருஷம் பொறுத்து காட்டை விட்டு நாட்டுக்கு வந்ததும், மொதல்ல தன்னைப் பெத்த கோசலையின் காலில் விழாமல், சின்னம்மா கைகேயியின் கால்ல விழுந்தான். கைகேயி குற்ற உணர்வால குறுகி நின்னப்போ,
"அம்மா ,நீ என்னை காட்டுக்கு அனுப்பிச்சதாலதான், எனக்கு ஞானமுள்ள பல விஷயங்கள் தெரிஞ்சது. எங்கப்பா எம்மேல எத்தனை அன்பு வச்சிருந்தார், பரதன் எவ்வளவு உயர்ந்த குணம் உள்ளவன், அனுமான் எவ்வளவு பெரிய பக்திமான், சுக்ரீவன் எவ்வளவு சிறந்த நண்பன்,சீதை எப்பேர்ப்பட்ட கற்புக்கரசி, என் வில் எவ்வளவு சக்தி வாய்ந்தது... இப்படி பல விஷயங்கள் காட்டுக்குப் போனதாலதானே தெரிஞ்சது"ன்னு கைகேயியை சமாதானப்படுத்தினான்.
டி.பாலாஜி, வடலூர்
ஒரு 'டச்சிங் சீன்' சொல்லுங்களேன்?
நம்ம நேருஜி பிரதமரா இருந்தப்போ, ஜப்பானுக்கு போனாரு. அங்கே இருக்கிற குழந்தைகள் விழாவுல, "உங்களுக்கு இந்தியாவுலருந்து என்ன வேணும்?" ன்னு கேட்டாரு. குழந்தைங்க, " ஒரு குட்டி யானை வேணும்" னு கேட்டாங்க. இந்தியா திரும்பியதும் நேருஜி ஒரு குட்டி யானையை அலங்கரிச்சு, அதுக்கு தன்னோட செல்ல மகள் 'இந்திரா' வோட பெயரை சூட்டி அனுப்பி வைச்சாரு. இது 1950ல் நடந்தது. 'இந்திரா' யானை ஜப்பான் மிருகக்காட்சி சாலையில் பெரிய யானையா வளர்ந்தது.
31-10-1984ல் நம்ம இந்திராகாந்தி அம்மாவை சுட்டாங்க. கரெக்டா அதே நாள்ல ஜப்பான் ல இருக்கிற இந்திரா யானையும் இறந்திடுச்சு.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?