வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது - நாட்டு மக்களுக்கு விஜய் புத்தாண்டு வாழ்த்து
சென்னை,
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம்.
புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது. வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது.
வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று இப்புத்தாண்டை வரவேற்போம்.
அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?