#உனக்காகவே நான்

#உனக்காகவே நான்



உன் கண்ணின் கடைப்பார்வைக்கே

கவிழ்ந்தவன் நானடி !!

உலகில் எத்தனை கோடி பெண்களிருந்தாலும்

உலக அழகியே ஆனாலும்

உன்னை தவிர வேறொரு பெண்ணை

பாழாய் போன மனசு

திரும்பி கூட பார்ப்பதில்லை !

என்னை என்னடி செய்தாய் ?

ஒரு வேளை

வசியம் செய்து மயக்கினாயோ மாயக்காரியே?!!

உன் முட்டைக் கண்ணில்

கூழ் கூழாய் நொறுங்கி போனேன்டி!!

உன் நெற்றியில் என்னை ஏனடி

ஒட்டு பொட்டாய் ஒட்டி கொண்டாய் !!

உன் கூந்தலில் என்றுமே வாடாத

நெகிழி பூக்களாக என்னை சூடிக் கொண்டாயோ ?

என் நினைவுகளில் மொத்தம் நீயே நிற்கிறாய் !!

கடவுளே நம் காதலுக்கு உதவி செய்தான் பாரடி

உன்னை கரம் பிடிக்க

உனக்கு முன்னதாகவே

என்னை படைத்து விட்டான்

இதயம் துடித்து கொண்டே

அடித்துச் சொல்கிறது

உனக்காகவே நான் பிறந்திருக்கிறேன் என்று !!!


-லி .நௌஷாத் கான் -

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%