வந்தவாசி, நவ 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்ட உற்சவ மூர்த்திகள் மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதைப்போலவே வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?