ரூ.23 கோடி எருமை மாடு உயிரிழப்பு; காப்பீட்டு தொகைக்காக கொலையா? கொந்தளித்த நெட்டிசன்கள்

ரூ.23 கோடி எருமை மாடு உயிரிழப்பு; காப்பீட்டு தொகைக்காக கொலையா? கொந்தளித்த நெட்டிசன்கள்



நாள்தோறும் ரூ.1,500 செலவிடப்பட்டு வந்ததுடன், அவ்வப்போது பாதாம் எண்ணெய் மசாஜும் செய்யப்படுவது உண்டு.

ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானில் புஷ்கர் என்ற பெயரில் பிரபல கால்நடைகளின் திருவிழா ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு வகையான ஒட்டகங்கள், குதிரைகள், பசுக்கள், எருமை உள்ளிட்ட கால்நடையினங்கள் கலந்து கொண்டன. அவற்றில் உயரத்தில் மிக சிறிய பசு இனம், விலையுயர்ந்த குதிரை உள்ளிட்டவையும் அடங்கும். ஒட்டக பந்தயங்களும் நடத்தப்பட்டன.


இதேபோன்று, ரூ.23 கோடி மதிப்பிலான எருமை ஒன்றும் இந்த கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் கூட ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். ரூ.15 கோடி மதிப்பிலான ஷாபாஸ் என்ற குதிரை, ரூ.23 கோடி மதிப்பிலான அன்மோல் என்ற எருமை மாடு ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.


1,500 கிலோ எடை கொண்ட 8 வயதே ஆன இந்த எருமைக்கு நாள்தோறும் பால், பழங்கள், முட்டைகள் என ரூ.1,500 செலவிடப்பட்டு வந்தது. அவ்வப்போது பாதாம் எண்ணெய் மசாஜும் செய்யப்படுவது உண்டு. இந்நிலையில், திடீரென அன்மோல் இறந்து போனது.


எனினும், இயற்கைக்கு எதிராக ஊட்டச்சத்து உணவுகளை கொடுத்ததும், ஹார்மோன் வளர்ச்சியை தூண்டும் வகையிலான செயல்பாடுகளாலும் இது நடந்துள்ளது என்றும், வணிகத்தின் பெயரில் விலங்குகளுக்கு கொடூரம் இழைக்கப்படுகிறது என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.


அதில் ஒருவர், இது திடீரென ஏற்பட்ட மரணம் அல்ல. காப்பீட்டு தொகையை பெறுவதற்காக திட்டமிட்டு அதனை கொல்ல சதி செய்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். ரூ.21 கோடி என்றாலும் விதியில் இருந்து தப்ப முடியவில்லை என்றும் ஒருவர் பதிவிட்டு உள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%