ரூ.13.17 கோடியில் புதிய, முடிவுற்ற திட்டங்கள்: செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, கலெக்டர் தங்கவேல் தலைமையில், கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.13.17 கோடி மதிப்பீட்டிலான மொத்தம் 15 வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்தும், புதிதாக தொடக்கியும் வைத்தார். இதில் 4 முடிவுற்ற திட்டங்கள் திறக்கப்பட்டதுடன், 11 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், பெரியகோதூரில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சமுதாய கூடம், திருக்காம்புலியூர் ரவுண்டானில் ரூ.10 லட்சத்தில் பயணியர் நிழற்கூடம், ரூ.15 லட்சத்தில் புதிய நியாயவிலைக்கடை, பெரியகுளத்துப்பாளையத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாங்கப்பாளையம், குளத்துப்பாளையம் பகுதிகளில் நீர்வழங்கும் பம்புசெட் மற்றும் எம்வி பேனல் அமைத்தல் வாங்கல்குளத்துப்பாளையத்தில் ரூ.64.50 லட்சத்தில் வால்வுகள் அமைத்தல், பெரியகாளிபாளையம், நெரூர் வடபாகம் ஊராட்சியில் ரூ.65 லட்சத்தில் கால்நடை மருந்தகம், நெரூர் தலைமை நீரேற்று நிலையத்தில் பம்புசெட் மற்றும் உபகரணங்கள் அமைத்தல் ரூ.97.50 லட்சம், நெரூர் நீரேற்று நிலையம்–பாலம்மாள்புரம் சம்ப் இணைப்பிற்கான அலுமினியம் கேபிள் அமைத்தல் ரூ.97 லட்சம், நெரூர்–பாலம்மாள்புரம் நீர்ப்பாதை பம்பு சோதனை ரூ.33 லட்சம் பாலம்மாள்புரம் ஐந்துரோடு பகுதியில் பயணியர் நிழற்கூடம் ரூ.8 லட்சம் என 11 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டது.
முடிவுற்ற திட்டங்கள்
அரிக்காரம்பாளையம் தெற்கு தெருவில் சின்டெக்ஸ் டேங்க் ரூ.2 லட்சம், வாங்கப்பாளையம் நீர்நிலையத்தில் குளோரினேசன் ஆலை ரூ.15.50 லட்சம், சங்கர்காயத்ரி நகர் பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் ரூ.50,000, வாங்கப்பாளையம் நீரேற்று நிலையத்தில் புதிய டேடியல் ஆம்ஸ், மோட்டார் பம்புசெட் ரூ.2.44 கோடி என மொத்தம் ரூ.13.17 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கப்பட்டும் திறக்கப்பட்டும் உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசுகையில் செந்தில்பாலாஜி கூறியதாவது:
“ கரூர் மாநகராட்சியிலும், ஊரகப் பகுதிகளிலும் அடித்தள வசதிகளை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இங்கு தொடங்கப்பட்ட ஒவ்வொரு பணியும் தரமான முறையில், காலக்கெடுவுக்கு உள்ளாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ், துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி கமிஷனர் கே.எம்.சுதா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சாந்தி, மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, அன்பரசு, சக்திவேல், வட்டாட்சியர் மோகன்ராஜ் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.