ராகுல், சோனியாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

ராகுல், சோனியாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு


 

புது டெல்லி: நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, அத்துடன் மறைந்த கட்சித் தலைவர்களான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியன் தனியார் நிறுவனம் ஆகியோர் மீது சதி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை சுமத்தியுள்ளது.


குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிட்ரோடா, துபே, சுனில் பண்டாரி, யங் இந்தியன் மற்றும் டோட்டெக்ஸ் மெர்ச்சன்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள்களை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இவர்கள் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாக விசாரணை நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.


ரூ.90 கோடி கடனுக்கு ஈடாக, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்களை மோசடியாக அபகரித்த யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் 76% பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%