மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலை மிக அருகில் ரசிக்க தனிப்பாதை
சென்னை மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணி கள் வந்து செல்வது வழக்கம். அந்தவகையில் சுற்றுலா பயணிகளை கவ ரும் வகையிலும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக் கான மரப்பலகை ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் புதி தாக மாற்றுத்திறனாளிகளு க்கான பலூன் சக்கர நாற் காலி திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ள மரப்பாதையின் மூலம் இதுவரை மாற்றுத்திற னாளிகள் சக்கர நாற்கா லியை பயன்படுத்தியே கடல் அலையை காண சென்று வந்தனர். இதனை மாற்றி தற்போது பலூன் சக்கர நாற்காலிகள் மூலம் நவீன நடைபாதை மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் கடல் அலை களை காண சென்னை மாந கராட்சி ஏற்பாடு செய்துள் ளது. இதற்காக “போர்டோ மேட்” என்னும் நவீன நடைபாதை அமைக்கப்பட் டுள்ளது. கிட்டத்தட்ட 526 மீட்டருக்கு கடற்கரை சர்வீஸ் சாலை முதல், கடற் கரை முகத்துவாரம் வரை கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவை கிரேன்களை தாங்கக் கூடிய, உறுதியான, நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட கனரக HDPE (High-Density Polyethy lene) மேட் (Mat) தரை விரிப்புகள் ஆகும். இது கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற் படாத வகையிலும் அமைக் கப்பட்டுள்ளது. இதில் உடல் உபாதை உள்ள வர்கள், முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள், பலூன் சக்கர நாற்காலிகள் மூலமாக கடல் அலைக்கு சென்று கடல் அலையை ரசிக்கலாம். இந்த புதிய நாற்காலி யில் காற்று நிரப்பப்பட்ட பலூன் வடிவிலான சக்கரங் கள் பயன்படுத்தப்பட் டுள்ளன. இந்த சக்கர நாற்காலிகள் துருப்பிடிக் காத வகையில் அலுமினி யம் மற்றும் எஃகு சட்டங் களால் உருவாக்கப் பட்டுள்ளது. மற்ற சக்கர நாற்காலிகளுடன் ஒப்பிடு கையில் இந்த பலூன் சக்கர நாற்காலிகள் எளி தில் கடற்கரை மணலில் வேகமாக செல்லும் வகை யில் வடிமமைக்கப் பட்டுள்ளது. இந்த மேம் பாட்டு பணிகள் பொது மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?