முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன உத்தரவு

முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நூதன உத்தரவு

சென்னை:

நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் 5 பேர் முதி​யோர் இல்​லங்​கள் அல்​லது ஆதர​வற்​றோர் விடுதிக்​குச் சென்று அங்​கிருப்​பவர்​களு​டன் தங்​களது நேரத்தை செல​வழிப்​பதுடன், தங்​களது சந்த பணத்​தில் ஸ்பெஷல் மதிய உணவு அல்​லது இரவு உணவு வாங்​கிக்கொடுக்க வேண்​டுமென சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி பட்​டு​தே​வானந்த் உத்தரவிட்டார்.


திருப்​பத்​தூர் மற்​றம் வேலூர் மாவட்​டத்​தில் தற்​காலிக அரசு வாகன ஓட்​டுநர்​களாக பணிபுரிந்த சி.சின்​னதம்​பி, எம்​. கிருஷ்ண​மூர்த்​தி, பி.ஆனந்​தன் ஆகியோரை பணிநிரந்​தரம் செய்ய கடந்த 2021-ம் ஆண்டு செப்​.29-ம் தேதி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி சி.சர​வணன் உத்​தர​விட்​டிருந்​தார்.


இதனை அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி மூத்த ஐஏஎஸ் அதி​காரி​களான குமார் ஜெயந்த், எஸ்​.கே.பிர​பாகர், வி.​ராஜா​ராமன், பி.கு​மார​வேல் பாண்​டியன், டி.​பாஸ்கர பாண்​டியன் ஆகியோ​ருக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி பட்​டு​தே​வானந்த் முன்​பாக நடந்​தது. அப்​போது சம்​பந்​தப்​பட்ட ஐஏஎஸ் அதி​காரி​களும் ஆஜராகி மனு​தா​ரர்​கள் 3 பேரும் கடந்​தாண்டு பணிநிரந்​தரம் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக தெரி​வித்​தனர்.


அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கே.​பாலு, 3 ஆண்​டு​கள் கால​தாமதத்​துடன் அது​வும் அவம​திப்பு வழக்கு தொடர்ந்த பிறகு பணிநிரந்தர உத்​தரவை நிறைவேற்​றி​யுள்​ளனர். இதனால் மனு​தா​ரர்​களின் பணிமூப்பு பாதிக்​கப்​பட்டு அவர்களுக்கு ஊதி​யம் போன்ற இதர பணப்​பலன்​களி​லும் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது என வாதிட்​டார்.


அதையடுத்து நீதிப​தி, மனு​தா​ரர்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இந்த பணஇழப்பை சரிசெய்​யும் வகை​யில் 5 ஐஏஎஸ் அதி​காரி​களும் தலா ரூ.1.25 லட்​சம் வீதம் தங்​களது சொந்த பணத்தை மனு​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டும் என்​றார். அதற்கு அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் பி.குமரேசன் இந்த உத்​தரவு அதி​காரி​களுக்கு கொஞ்​சம் கடின​மானது என்​றார்.


அதையடுத்து நீதிபதி பட்​டு​தே​வானந்த் 5 பேரும் ஏதாவது முதி​யோர் இல்​லம் அல்​லது ஆதர​வற்​றோர் இல்​லம் சென்று சேவை செய்ய வேண்​டும் என உத்​தரவு பிறப்​பிக்​கலாமா என்​றார். அதற்கு ஐஏஎஸ் அதி​காரி​கள் சம்​ம​தித்து உத்​தர​வாத மனுக்​களை தாக்கல் செய்​தனர். அதையடுத்து நீதிபதி பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், 5 பேரும் நிபந்​தனையற்ற மன்​னிப்பு கோரி​யுள்​ளதுடன் சேவை செய்​கிறோம் என்​றும் உறு​தி​யளித்​துள்​ளனர்.


எனவே அவர்​கள் 5 பேரும் இரு​வாரங்​களில் தங்​களது விருப்​பப்​படி அவர்​கள் பணிபுரி​யும் ஊரில் உள்ள ஏதாவது ஒரு முதி​யோர் இல்​லம் அல்​லது ஆதர​வற்​றோர் விடு​தி​யில் இருப்​பவர்​களு​டன் தங்​களது நேரத்தை செல​விட்​டு, தங்​களது சொந்த செல​வில் ஸ்பெஷல் மதிய உணவு அல்​லது இரவு உணவை வாங்கி கொடுத்து அவர்​களுக்கு தன்​னம்​பிக்கை ஏற்​படுத்த வேண்​டும்.


இந்த சேவை குறித்து நீதித்​துறை பதி​வாளரிடம் ஆதா​ரங்​களு​டன் பிர​மாணப்​பத்​திரம் தாக்​கல் செய்ய வேண்​டும். ஒரு​வேளை யாராவது இந்த உத்​தர​ வாதத்தை நிறைவேற்ற தவறி​னால் அவம​திப்பு வழக்கை உயர்நீதி​மன்​றம் மீண்​டும் வி​சா​ரிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டார். நீதிபதி பட்டு தேவானந்த் தற்​போது ஆந்​தி​ரா​வுக்​கு பணி​மாறு​தலாகி சென்​று விட்​டார்​ என்​பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%