முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோவுக்கு பாராட்டு; கமல்ஹாசனுக்கு வாழ்த்து

சென்னை:
பதவிக்காலம் நிறைவு பெற்ற நாடாளு மன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப் பேற்கவுள்ள எம்.பி.க்களை வாழ்த்தியும் திமுக தலை வரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமை களையும் சங்கநாதமென முழங்கிய அன்பு அண்ணன் வை கோவுக்கு பாராட்டுகள், அருமை நண்பர் கமல்ஹாசன் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு உள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ நான்கு முறை மாநிலங்களவை உறுப்பின ராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் பணி யாற்றி தனக்கு கிடைத்த நீண்ட அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்க நாதமென முழங்கியவர் என்று முதலமைச்சர் பாராட்டி யுள்ளார். வைகோ ஜூலை 24 ஆம் தேதி மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் கலைஞரையும், கலை ஞரின் மனசாட்சியான சிந்தனையாளர் முரசொலி மாறனை யும் நினைவுபடுத்தி நன்றி கூறியதுடன், தனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?