" ரகுராஜன் விமலா தம்பதியர்க்கு இரண்டு மகன் ஒரு மகள் நடுத்தர குடும்பம் தான் . தன் பெரிய மகன் விஷாலுக்கு மணம் முடித்தார் . மருமகள் கமலி நல்ல பெண் .
எதிர்பாராத விதமாக விபத்தில் விஷால் உயிர் இழக்க ரகுராஜன் குடும்பம் நிலை குலைந்து போனது .
ஒரு வழியாக இரண்டாவது மகன் ரவிக்கு திருமணம் முடித்தார் ரகுராஜன் . மருமகள் ராணியும் நல்ல பெண் .
ஒராண்டிற்கு பிறகு தன் மகள் வர்ஷாவிற்கு திருமணம் முடித்தார் ரகுராஜன் . மூத்த மருமகள் கமலி தாய் வீட்டுக்கு செல்லாமல் புகுந்த வீட்டிலேயே இருந்து விட்டாள் .
வர்ஷாவிற்கு வளையல் காப்பு சீமந்தம் நடக்க ரகுராஜன் விமலா தம்பதியர் ராணியை சடங்கு செய்ய அழைத்தார் . கமலி அங்கு வராமல் ஒதுங்கி இருந்தாள். விதவை என்கிற ஏக்கம் வேறு .
சடங்கு முடிந்த பிறகு வர்ஷா கமலி காலில் விழுந்து ஆசி பெற்றாள் . வர்ஷாவை தன் தங்கையாக பார்த்து ஆனந்தம் கொண்டாள் கமலி .
பிறகு தன் தந்தை தாயான ரகுராஜன் விமலாவிடம் சென்று உங்கள் மகள் வர்ஷாவிற்கு இப்படி நடந்து இருந்தால் அமைதி காப்பீர்களா...?".
அண்ணியும் உணர்ச்சியுள்ள சிறு பெண் தானே ...? அண்ணன் விஷால் இறந்து போய் இரண்டு ஆண்டுகள் ஆகிறது இன்னும் அண்ணி தன் வீட்டிற்கு போக வில்லை உங்களுக்கு இது புரியாதா...?" புரிந்தும் செயல் பட மனம் இல்லையா....?" என்று வெடித்து சிதறினாள் .
ரகுராஜன் விமலா தம்பதியருக்கு கமலி தன் மூத்த மருமகள் அல்ல மூத்த மகள் என்பது தெளிவாக புரிந்தது ....."
குழம்பிய மனம் தெளிவு பெற்றது உடன் ஒரு மாதத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாக ராகுலை கொண்டு வந்தார்கள் ரகுராஜன் விமலா தம்பதியர் .
வர்ஷாவை பார்த்த கமலி அவள் காலில் விழ முடியாமல் ஆனந்த கண்ணீரில் நனைத்தாள் அவளை அனைத்த படியே . மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அதுவும் சரிதானே..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?