மாணவிகள் உயர்கல்வி தேவைக்கு தூத்துக்குடி கலெக்டரை அணுகலாம்

மாணவிகள் உயர்கல்வி தேவைக்கு  தூத்துக்குடி கலெக்டரை அணுகலாம்


கோவில்பட்டி, ஜூலை 13-

மாணவிகள் உயர் கல்வி தேவைக்கு என்னை அணுகலாம் என தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் கூறி உள்ளார்.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த நிகழ்வில், பொ.சூசையம்மாள் நினைவு கட்டிடத்தை கலெக்டர் இளம்பகவத் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து உதவிகளும் செய்யப்படும். கோவில்பட்டி பகுதியிலிருந்து வரும் மாணவிகள் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில் உள்ளனர். எந்தவொரு மாணவிக்கும் நிதி தடையாக இருக்ககூடாது என்பதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். எனவே, எந்தவிதமான கல்வி தேவையாக இருந்தால் என்னை அணுகலாம். அனைத்து மாணவிகளும் உயர்கல்வி கற்று நல்ல நிலையை அடைய வேண்டும் என்றார்.

தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் பேசும்போது, ‘‘ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். மனப்பாடம் மட்டுமே மாணவ, மாணவிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிடாது. அவர்களுக்கு பாடங்கள் தொடர்பான புரிதல் வேண்டும். அதனை ஆசிரியர்கள் முறையாக வழங்க வேண்டும். மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

விழாவில் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, நகர்மன்றத் தலைவர் கருணாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%