பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது- 'ப' வடிவில் இருக்கை •பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்
Jul 12 2025
93

சென்னை, ஜூலை 13-
தமிழகத்தில் பள்ளி வகுப்பறைகளில் பெஞ்ச் இருக்கும் அமைப்பை மாற்றி அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை-
தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே, கற்பித்தலில் கவனச் சிதறலைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை 'ப' வடிவில் அமைக்க வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும், வாய்ப்புள்ள வகுப்பறைகளை 'ப' வடிவில் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.
காரணம் என்ன?
மலையாள படத்தில் இடம்பெற்ற காட்சிகளை மையமாக வைத்து, கேரளாவில் சில பள்ளிகளில் வகுப்பறை இருக்கைகள் U அல்லது V வடிவில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மாநிலஅளவில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்தே தற்போது தமிழ்நாட்டில் இந்த முறையை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் வகுப்பறை வடிவமைப்பானது ஆசிரியர்களுக்கு நேராக வரிசையாக பெஞ்ச்கள் போடப்பட்டு இருக்கும். அதில், மாணவர்கள் வரிசையாக அமர்ந்து பாடங்களை கவனிப்பார்கள். இதில், உயரமான மாணவர்கள் கடைசி பெஞ்சிலும், உயரம் குறைந்த மாணவர்கள் முதல் பெஞ்சிலும் அமர்வது பொதுவான ஒன்றாகும்.நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் வரிசையிலும்,சராசரிக்கும் கீழ்படிக்கும் மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர்த்தப்படுவதும் உண்டு. தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த இந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.இதனால் இனி கடைசி பெஞ்ச் என்பதே இருக்காது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?