மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ஊட்டி:

நீல​கிரி மாவட்​டம் காத்​தாடிமட்​டம் அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரிய​ராகப் பணிபுரிந்த செந்​தில்​கு​மார் (50), பள்​ளி​யில் பயிலும் மாணவி​களுக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக கடந்த 3-ம் தேதி மாணவி​கள் புகார் தெரி​வித்​தனர்.


இதுகுறித்து குழந்​தைகள் நலன் பாது​காப்​புக் குழும உறுப்​பினர் கொடுத்த புகாரின் பேரில், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்​து, செந்​தில்​கு​மாரை கைது செய்​தனர். இந்​நிலை​யில், செந்​தில்​கு​மாரை குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் கைது செய்​யு​மாறு நீல​கிரி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் என்​‌.எஸ்​‌.நிஷா, மாவட்ட ஆட்​சி​யருக்​குப் பரிந்​துரைத்​தார்.


இதன்​பேரில், மாவட்ட ஆட்​சி​யர் லட்​சுமி பவ்​யா, குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் செந்​தில்​கு​மாரை அடைக்​கு​மாறு நேற்று உத்​தர​விட்​டார். குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் அடைப்​ப​தற்​கான ஆணை​யின் நகல் செந்​தில்​கு​மாருக்கு வழங்​கப்​பட்​டு, அவர் கோவை மத்​திய சிறையில் அடைக்​கப்​பட்​டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%