(ஒரு பக்க சகதை)
_____
கவிதைகளை வாசிப்பது பிடிக்கும் கண்மணிக்கு, சில நேரங்களில் வாழ்க்கையே ஒரு புதிராகவே இருந்தது.
அதிலுமா ரவியைப் பற்றிய புதிர்? அது முடிவற்ற கணக்குப் போல் தோன்றியது.
அந்த குடியிருப்பு பகுதியில் கிட்டத்தட்ட அனைவரும் பேசிக்கொள்ளும் வகையில் இருந்தவன் ரவி.
அவனது தனிமைதான் அனைவரையும் திகைக்கவைத்தது.
அவளோடு வேலை பார்கிறான்
டீ, காபி வேண்டாம்…
பக்கத்தில் வந்து யாரும் சத்தம் போடாதீர்கள் என்னிடம் பேச வேண்டாம்..எனக்கான
உணவை நானே சமைத்துக் கொண்டு வருவேன். உணவகம் வர மாட்டேன். என்
வீட்டிற்கு யாரும் வரவேண்டாம். அவன் வாய் திறந்து பேசுவதை முடிந்தவரை குறைத்து விடுவான்.
இப்படி வாழும் யாராவது இந்த மண்ணுலகில் இருக்க முடியுமா?
ஆனால் இருந்தான். ரவி. கடுமையான உழைப்பாளி. அனைத்து வேலையும் செய்வான். கொடுக்கும் ஊதியம் பெற்றுக்கொள்வான் . அதனால் அவனை எல்லோருக்கும் பிடிக்கும். கண்மணிக்கு ரொம்ப பிடிக்கும்.
அதனால் ரவியைக் கவனித்துக் கொண்டே இருப்பாள் கண்மணி.
தனக்கும் அவனுக்கும் ஏதேனும் பகிர்ந்து கொள்ளும் நேரம் வரலாம் என்ற நம்பிக்கையோடு…
"அவன் அமைதி அவளுக்கு பிடித்தது.
அவன் பார்வையை எதிர்பார்த்து…
அவன் வார்த்தைகளை எதிர்நோக்கி
அவன் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறான் என கவனிக்க தொடங்கிய நாள் முதல்,
அவன் மீது காதலாகிவிட்டது கண்மணிக்கு
அவனை எப்படியும் எதிர்கொண்டு பேச முடிவு செய்தாள்.
ஒரு நாள் அவனை தொடர்ந்து சென்று பார்த்தாள்.
அந்த நாளே... உண்மை தெரிந்த நாள்.
அவன் நிச்சயமாக ஒரு ஏலியன்!
மனித உடலில் வாழும், மனிதர்களை ஒத்த ஒரு வகை உயிரினம்.
அவனுடன் தொடர்பிலிருக்கும் மற்ற “பேர் தெரியாத” சிலரும் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
அவர்கள் அனைத்தும் அப்பால் இருந்து மனிதர்களோடு வாழ்ந்து கொண்டிருந்தனர் – மனிதர்களுக்கே தெரியாமல்!
அந்த உண்மை கண்மணியின் நெஞ்சில் பதியவே, அவளை கவனித்து விட்ட ரவி
அவளது அருகே வந்தான் .
அவளது கையை மெதுவாக பிடித்தான்.
அவள் பயந்து விலக, அவன் புன்னகை செய்து, மெதுவாக அவள் விரல்களில் விரல்களை ஊன்றி.
"
இங்கு இப்போது நடந்ததை உன் நினைவிலிருந்து அழித்துவிட்டேன்.
நீ வீட்டுக்கு சென்றவுடன்... அதை மறந்துவிடுவாய்,”
என்று அவன் மெளனமாக சொன்னான்.
அவள் ஓடிச் சென்று அம்மாவிடம் சொல்ல வந்தாள்.
“அம்மா... ரவி…!” என்றவுடன்,
அடுத்த நொடியே நின்றுவிட்டாள்.
எதையோ மறந்துவிட்டது போல அவளின் முகம் இருகியது.
“ஏம்மா என்ன சொல்ல வர?” என்ற அம்மாவின் கேள்விக்கு,
“எதையோ சொல்ல வந்தேன்… ஆனால்…” என்றாள் கண்மணி.
மழை வழியே தெரியும் அந்த தொலைதூர நினைவின் நிழலைப் போல…
ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் தவழ்ந்தது.
ஆனால் ஏதும் சொல்ல இயலவில்லை.
அவள் கதவை மூட, வீட்டின் எதிரே நின்றிருந்தான் ரவி.
மனதுக்குள்,
“நீ என்னை மறந்துவிட்டாலும்...
நான் உன்னை நினைத்தே வாழ்கிறேன்.
நீ என் இதயத்தின் மறக்க முடியாத பாகம்…”
என்ற வலியை ஒரு பார்வையாக அனுப்பினான்.
கண்மணி அதை
உணராமல் உணர்ந்தாள்.
------
ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி