மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு



டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு சந்தித்து பேசினார்.


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு உள்ளன. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் பா.ஜ.க. தீவிர களப்பணி ஆற்றி வருகிறது.


தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனக்கான முத்திரையை மேலிடத்தில் பதிக்க கங்கணம் கட்டி பணியாற்றி வருகிறார்.


அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. கேட்க வேண்டிய தொகுதிகள் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பா.ஜ.க. தலைமையிடம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லி சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற பிறகு பல ரகசிய சந்திப்புகளையும் அவர் மேற்கொண்டார்.


இந்நிலையில் இரவு 9 மணி அளவில் டெல்லி கிருஷ்ணமேனன் ரோட்டில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார். 10.20 மணி அளவில் அவர் வெளியே வந்தார்.


இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘மத்திய உள்துறை மந்திரியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.


கூட்டணி கட்சி தொடர்பாகவோ, தொகுதி பங்கீடு தொடர்பாகவோ பேசவில்லை. என்று தெரிவித்தார்.


இந்த நிலையில், அ.தி.மு.க.விடம் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதால் அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக கட்சியினர் பணியாற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%