மது வாங்க ரூ. 10 தராததால் முதியவரை குத்திக்கொன்ற சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்

மது வாங்க ரூ. 10 தராததால் முதியவரை குத்திக்கொன்ற சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்


 

அமராவதி,


ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த முதியவர் டாடாஜி (வயது 50). இவர் இன்று அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த 17 வயது சிறுவன் மது வாங்க ரூ. 10 தருமாறு டாடாஜியிடம் கேட்டுள்ளான்.


சிறுவன் கேட்ட ரூ. 10 கொடுக்க டாடாஜி மறுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போதையில் இருந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் டாடாஜியை சரமாரியாக குத்தியுள்ளான். இந்த கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த டாடாஜி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், டாடாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%