
சென்னை, ஜூலை 14
மதுரையில் செப்டம்பர் 4 ந் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆதர வாளர்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.வை மீட்டெடுப்ப தற்கான சட்ட போராட்டம் தொடரும்.
சட்ட போராட்டத்தில் உறுதுணை யாக நின்ற அனைவருக்கும் நன்றி.
அண்ணா தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம்.
அரசியல்ரீதியான கட்சிகளுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்கு எந்த தலைவர் நன்மை செய்கிறாரோ அவர்தான் ஆளும் இடத்துக்கு வருவார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதைத்தான் செய்தார்கள்.
இன்று நடந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். சில முடிவுகளை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அது என்ன முடிவுகளென்று உங்களுக்கே தெரியும். மதுரை நமக்கு எப்போதுமே ராசியான இடம். 2011ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கையில், கோவை திருச்சி, மதுரையில் மண்டல மாநாடுகளை நடத்தலாம் என அம்மாவிடம் சொன்னோம். மதுரையில் நடந்த மாநாடுதான் 2 முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்தது.
மதுரையில் மாநாடு
எனது தலைமையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும். எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிப்பேன். மதுரை மாநாட்டுக்கு சசிகலாவையும் தினகரனையும் நிச்சயம் அழைப்போம் என்றார்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?