
பெரம்பலூர். ஜூலை 9-
பெரம்பலூர் அருகே, கொட்டரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 175 பயனாளிகளுக்கு, ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, கொட்டரை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் தலைமையில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், கொட்டரை பகுதி பொதுமக்கள், கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை வேண்டி வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மிகவிரைவில் பணி முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குநர் பாபு உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?