தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம்
Jul 12 2025
12

புதுக்கோட்டை, ஜூலை 10- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தொழில்நுட்பக் கையேட்டினை வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை மலைப்பயிரான தென்னை விவசாயிகளால் 14,155 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடியின் போது ஊடுபயிராக வாழை, காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் ஆகியவை சாகுபடி செய்வதால் விவசாயிகள் கூடுதலாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. இக்கருத்தரங்கத்தில், மொத்தம் 15 விவசாயிகளுக்கு ரூ.27.39 லட்சம் மானியத்துடன் வேளாண் இடுபொருட்கள், மரக்கன்றுகள் மற்றும் ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றார். புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?