பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்



திருச்சியை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர். இவர்தான் போரிட்ட எந்த ஒரு போரிலும் தோற்றதில்லை எனவரலாற்றில் எழுதப்பட்டு உள்ளது.


இவரது நினைவாக தபால்தலை வெளியிட வேண்டுமென அந்த சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழகஅரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த நிலையில் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டு பேசினார்.


நிகழ்ச்சியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி. எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தலைவர் ஆர்.விஸ்வநாதன், முத்தரையர் சமுதாயத்தின் முதல் பத்மஸ்ரீ விருதாளர் "கிராமலயா" தாமோதரன், இந்த சமுதாயத்தின் மற்றொரு தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கிராமலயா தாமோதரன் விழாவில் பேசும்போது, முத்தரையர் சமுதாய பாதுகாப்புக்காக நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் அதிக பிரதிநிதித்துவங்கள் தர வேண்டும் என வலியுறுத்தினார்.


பிரதமர் மோடி வாழத்து


இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழத்து செய்தியில், “பெரும்பிடுகு முத்தரையர் குறிப்பிடத்தக்க தொலைநோக்கு பார்வை மற்றும் சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டார். மேலும் தமிழ் கலாசாரத்தின் காவலராக திகழ்ந்தார் என்று கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%