வந்தவாசி, ஜன 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் "பெண் கல்வியும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட்டதாரி ஆசிரியர் (பொறுப்பு) சக்திவேல் தலைமை தாங்கினார். ரெட்கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இசை ஆசிரியர் டி.பி.வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, தெள்ளார் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் பங்கேற்று, பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் பள்ளி மாணவிகள் செல்போனுக்கு அடிமையாகக் கூடாது என்றும், சாலை பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் மாதவன், காவலர் பிரதாப் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?