பூதேரிபுல்லவாக்கம் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றியம்மன் தேர்த்திருவிழா கோலாகலம்:
Aug 29 2025
13

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
செய்யாறு ஆக. 30,
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ,பூதேரிபுல்ல வாக்கத்தில் அருள்மிகு தான்தோன்றியம்மன் கோயில் எழுந்தருளி உள்ளது .பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நேற்று முன்தினம் தேர்த்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருத்தேர் பணிக்குழுவினர் மற்றும் விழா குழுவினர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து தேர்திருவிழா ஏற்பாடுகளை விமர்சியாக செய்திருந்தனர் முன்னதாக தான்தோன்றி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை வழிபாடு நடைபெற்றது.
பின்னர் மூலவரான அருள்மிகு தான்தோன்றியம்மன் உற்சவர் ஆக எழுந்தருளி தேரில் அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து திருத்தேர்பவனியினை எம்எல்ஏ ஒ. ஜோதி வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பின்னர் அதன் நிலையை அடைந்தது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு காவல்துறை ,தீயணைப்பு துறை ,மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .மேலும் திருத்தேர்பணி குழுவினர், கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட விழா குழுவினர் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?