அறுசீர் மண்டிலம்.
ஆழியின் பேரலையே
வாராதே
அன்புகொண்ட மாந்தரையே
சேராதே!
பாழினச் செயல்களையேசெய்கின்றாய்
பலவுயிர் உண்டேதான்
விழுங்குகின்றாய்!
ஏழிசை பாடிடுமா
உன்னலைகள்
ஏற்றநல் முறையோடு
வரமாட்டாய்!
நாழிகை கூடத்தான்
நேரமின்றி
நற்கடல் தாண்டித்தான்
வருவதேனோ!
கடற்கோளாய் நீயும்தான்
பேர்பெற்றாய்
கணநேரம் காலமின்றி
வீசுகின்றாய்!
கடற்கரை உள்வாங்கி
வருகின்றாய்
கடலையே மீறித்தான்
வீசுகின்றாய்!
இடம்பொருள் ஏவலேதும்
அறியாமல்
ஏற்றநல் முறையுந்தான்
தெரியாமல்
படமெடுக்கும்
பாம்பைப்போல்
சீறுகின்றாய்
பார்த்திட பயமுந்தான்
கொள்வோமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%