புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½கோடி போதைப் பொருள் சிக்கியது
Nov 19 2025
10
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
புதுக்கோட்டையில் இருந்து தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தொண்டி அதிகாரிகள், நேற்று மதியம் எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கலியநகரி கிராமத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் இருந்து தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அந்த பஸ்சில் பயணிகள் உடைமைகள் வைக்கும் இடத்தில் சந்தேகப்படும் வகையில் ஒரு பாலித்தீன் பை இருந்தது. அதனை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது, அதில் உயர்ரக ஐஸ் போதைப்பொருள் (மெத் ஆம் பெட்டமைன்) இருந்தது.
உடனே பஸ்சை முழுமையாக அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த போதைப்பொருளை கடத்தி வந்தவர் யார்? என தெரியாததால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஸ் ரக போதைப்பொருள் சுமார் 1½கிலோ எடையில் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4½கோடி என கூறப்படுகிறது.
இது குறித்து சுங்கத்துறையினர் கூறுகையில், ஒன்றரை கிலோ எடையுள்ள மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் கைபற்றபட்டுள்ளது. பயணிகளிடம் விசாரணை செய்ததில் தகவல் கிடைக்கவில்லை. இந்த போதை பொருள் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு, தொண்டியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?