பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.6 ஆக பதிவு

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.6 ஆக பதிவு


மணிலா, அக். 10–


பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 7.6 ஆக பதிவாகி உள்ளது.


நில அதிர்வை உணர்ந்து மக்கள் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வீதிகளுக்கு ஓடினர். நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ‘அழிவுகரமான சுனாமி’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


பிலிப்பைன்ஸின் மின்டானோவ் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் 20 கி.மீ. (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதால், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை மற்றும் விரைவான வெளியேற்ற ஆலோசனை வெளியிடப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.


நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ. தொலைவில் "உயிருக்கு ஆபத்தான அலைகள்" உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிவோல்க்ஸ் நிறுவனம் கூறியது.


பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் நிறுவனம் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள கடலோர நகரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது.


இந்த சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவிற்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்கரைகளில் சிறிய அலைகள் பதிவாகின. அதிகபட்சமாக இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் அலைகள் 17 செ.மீ (6.7 அங்குலம்) உயரத்தை எட்டியது. சுனாமிக்கான பெரிய அச்சுறுத்தல் கடந்துவிட்டாலும், சிறிய அளவிலான கடல் கொந்தளிப்புகள் தொடரக்கூடும் என பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் பின்னதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.


மியான்மரில் இன்று அதிகாலை 5.53 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், மிதமான அளவிலான இந்த நிலநடுக்கத்தால், பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%