ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை
Oct 11 2025
32
பாகிஸ்தான் ஆப்கன் எல்லை பகுதிகளை தாக்குவது தவறு என்று தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாகி கூறியுள்ளார்.
காபூல்,
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மோசமானது. கடந்த மே மாதம் இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமானது. இப்போது தாக்குதல் இல்லை என்றாலும் இரு தரப்பிற்கும் இடையே அவ்வபோது முட்டல் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் தனது அருகில் உள்ள அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஏற்கனவே ஆப்கான்- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்த நிலையில் இந்தத் திடீர் தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் தலைவர் நூர் வாலி மெஹ்சூத்தை குறிவைத்து ஷாஜித் அப்துல் ஹக் சதுக்கத்திற்கு அருகே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2018-ல் மெஹ்சூத் இந்தக் குழுவின் தலைமையை ஏற்றார். மெஹ்சூத்தின் பெயரை பாகிஸ்தான் குறிப்பிடவில்லை என்றாலும், பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மட்டும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தாலிபான் வெளியுறவு மந்திரி அமீர்கான் முத்தாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆப்கன் எல்லை பகுதிகளை தாக்குவது தவறு. இந்தியாவுடன் ஆப்கனுக்கு நல்ல உறவு இருக்கிறது.ஆப்கானியர்களின் பொறுமையை சோதிக்காதீர்கள். எங்களை பற்றிய புரிதல் வேண்டும் என்றால் இங்கிலாந்து, சோவியத் ரஷியா மற்றும் அமெரிக்காவிடம் கேளுங்கள். இதுபோன்ற விளையாட்டு நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் முட்டாக்கி இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மெல்லச் சீராகி வருகிறது. இந்தச் சூழலில் திடீரென ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது உலகம் முழுவதும் பேசுபொருள் ஆகியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?