பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்
Jul 09 2025
96

பாபநாசம், ஜூலை 7-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில், பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரம், ஆவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,356 விவசாயிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புடைய 2,180 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். மறைமுக ஏலத்தில் கும்பகோணம், செம்பனார்கோயில், பண்ருட்டி, விழுப்புரம், கொங்கணாபுரம், ஆந்திரா உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 12 வணிகர்கள் கலந்து கொண்டு, குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7, 491, சராசரி ரூ.7,040, குறைந்தபட்சம் ரூ.6,509 என விலை நிர்ணயித்தனர். பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனனக் குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். விற்பனைக் குழு பணியாளர்கள் ஏலத்திற்கான முன்னேற்பாடு பணிகளை செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?