
புதுவை தமிழ்ச் சங்கத்தில் சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை, ஒளியிழை இதழ் இணைந்து பெருமையுடன் நடத்திய, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது -2025 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு.ந.ரங்கசாமி அவர்களும் சட்டப்பேரவையின் சபாநாயகர் ஏம்பலம் இரெ.செல்வம் அவர்களும் கலந்து கொண்டு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ்வின் கல்வி பணி மற்றும் சமூகப் பணியினை பாராட்டி 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கி பாராட்டினார்கள். விழா ஏற்பாடுகளை தமிழ்நிலம் அறக்கட்டளையின் தலைவர் சம்பத்குமார் மற்றும் ஒளியிழை இதழ் ஆசிரியர் சுகுமார் செய்திருந்தனர்..
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?