பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்; கேப்டன் உள்பட 6 வீரர்கள் பலி
Oct 31 2025
22
லாகூர்,
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய குர்ரம் பழங்குடியின மாவட்டத்தில் சுல்தானி பகுதியில் பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, வாகனத்தின் மீது தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து அவர்களை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்க செய்யப்பட்டது. இதில் ராணுவ கேப்டன் ஒருவர் உள்பட 6 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
எனினும் தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த மாத தொடக்த்தில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 துணை ராணுவ படையினர் மற்றும் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பினரே இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?