news Breaking News
clock

பள்ளியில் ரூ.76 ஆயிரம் திருட்டு: முதல்வர் காவல்துறையில் புகார்

பள்ளியில் ரூ.76 ஆயிரம் திருட்டு: முதல்வர் காவல்துறையில் புகார்



திருவில்லிபுத்தூர், பிப்.

- திருவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் அலு வலக அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் காவல்துறை யில் புகார் அளித்துள்ளார். திருவில்லிபுத்தூரிலிருந்து மல்லி செல்லும் சாலையில் தைலா குளம் அருகே அமைந்துள்ள அரிமா இண்டர் நேஷனல் பள்ளியில், பிப்.4-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளி பணிகள் முடிந்த பின்னர், பணியாளர் தங்கமணி அலுவலக அறை மற்றும் ரெக்கார்டு அறையை பூட்டி, சாவியை காவலர் குருநாதனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் பிப்.5 ஆம் தேதி காலை, பள்ளியின் கணக்காளர் செல்வலட்சுமி அலுவலக அறையின் கதவை திறக்க வந்தபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டி ருப்பதை கண்டுள்ளார். தொடர்ந்து அறைக்குள் சென்று பார்வையிட்ட போது, கட்டுமான பணிகளுக்காக வைக்கப் பட்டிருந்த ரூ.20,000 மற்றும் ரெக்கார்டு அறையில் வைத்தி ருந்த ரூ.56,000 என மொத்தம் ரூ.76,000 பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளியின் தாளாளருக்கு தகவல் தெரி விக்கப்பட்ட நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில் பள்ளி முதல்வர் சிவக்குமார், பள்ளியின் சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்தார். அதில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் பள்ளிக்குள் நுழைந்து பணத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கொண்டு, பள்ளி முதல்வர் சிவக் குமார் மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மல்லி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News