தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு



தருமபுரி, பிப். –


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலங்களின் பாசனத்திற்காக, கலெக்டர் ரெ.சதீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் வியாழக்கிழமை தண்ணீரை திறந்து வைத்தார்.


ஆயக்கட்டுதாரர்களின் கோரிக்கை யை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 2,050 ஏக்கர் நிலங்களும், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 3,280 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 5,330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், பிப்ரவரி 5 முதல் 48 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


இதன் மூலம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர், கம்மம்பட்டி ஆகிய கிராமங்களிலும், சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப் பட்டி, வெள்ளார், தெத்திகிரிப்பட்டி மற்றும் மல்லிகுந்தம் ஆகிய கிராமங்களிலும் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத் துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.


அறிவிக்கப்பட்டுள்ள நான்கு நனைப்புகளுக்கு பிறகும், ஒவ்வொரு நனைப்பிற்கும் இடையில் எட்டு நாட்கள் இடைவெளி வழங்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்ட காலத்தைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் கீருபா உள்ளிட்ட துறை அலுவலர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%