நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வதால் நடவடிக்கை: திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வதால் நடவடிக்கை: திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை



திருவள்ளூர், பிப். –


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல் 2025-–2026 சம்பா பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 13 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து 02.02.2026 வரையில் 8,425 மெ.டன் நெல்லினை 978 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இது வரையில் ரூ.16 கோடி தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். வியாபாரிகளோ அல்லது பிற மாவட்ட / மாநில நெல்லோ கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது மற்றும் தொடர்புடைய நெல் விற்பனையாளர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் தங்கள் அடங்கல் சான்றை வியாபாரிகளிடம் விற்றால் அவர்களுக்கு விவசாயம் தொடர்பான திட்டங்கள் நிறுத்தப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட புகார் குறித்து மண்டல அலுவலக எண் 9514265373 மற்றும் கைப்பேசி எண் 8925279611 தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%