news Breaking News
clock

ரூ.14.50 கோடியில் கிண்டியில் கடல் ஆமை பாதுகாப்பு மையம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

ரூ.14.50 கோடியில் கிண்டியில் கடல் ஆமை பாதுகாப்பு மையம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்



சென்னை, பிப்.–


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (6–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், கடல் பல்லுயிர் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக சென்னை, கிண்டியில் 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.


மேலும் தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை – 2026 யை வெளியிட்டார்.


இந்த மையம் அறிவியல் ஆராய்ச்சி, டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை ஆகியவற்றிற்கான சிறப்பு உட்கட்டமைப்பை வழங்குவதோடு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையமாகவும், பொதுக்கல்வி மற்றும் சமூக தொடர்பு தளமாகவும் செயல்படுவதோடு, தொடர்புடைய துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கான ஒரு முக்கிய மையமாகவும் செயல்படும்.


அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கூடு கட்டும் வாழ்விடங்களில் மிக முக்கியமான ஒன்று தமிழ்நாட்டின் கடற்கரையோரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் பரந்த பகுதிகளில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பெரிய அளவிலான கூடுகளை கட்டுகின்றன. உலகின் ஆறு கடல் ஆமை இனங்களில், 5 இனங்கள் இருக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு. இது அதன் உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News