
சென்னை, ஜூலை 23-
தலைமை நீதிபதியாக மட்டுமல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்தர மோகன் ஶ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டு நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்று பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தமிழகத்தின் பெருமைகளையும், சென்னையின் வளமையையும், 163 ஆண்டு பழமையான உயர் நீதிமன்றத்தின் தொன்மையையும் விளக்கி நீதி பரிபாலனத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்” என்றார்.
ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா, “1892 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவியை பெற்றுக் கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி சர்.ஆர்தர் கோலன், எந்த பாகுபாடும் இல்லாமல் நீதி, நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மரபை உறுதி செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல், சேவகனாக பணியாற்றி நீதித் துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன். மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படைத்தன்மையுடன் நீதி, நிர்வாகம் நடத்தப்படும். வழக்கறிஞர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவேன்” என உறுதி அளித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?